பரணி தமிழர் அறக்கட்டளையின் நிறுவனர் அன்பு இளவல் சமூக சேவகர், சிறந்த செயல்பாட்டாளர் கால்வாய் சிவா அவர்களுக்கு இன்று 39 வது பிறந்தநாள். அலுவல் காரணமான இன்று முக நூலை சரியாக பார்க்கவில்லை. இதற்கிடையில் அவரே என்னை காண எனது ஸ்டுடியோ வந்துவிட்டார். அவருக்கு எனது தூத்துக்குடி மாவட்ட வரலாறு நூலை பரிசாக கொடுத்து மகிழ்ந்தேன். இந்த ஆண்டில் நீங்கள் சாதனைகள் பல புரிந்து, வெற்றிகளை குவிக்க வேண்டும். உங்களது முகநூல் பதிவுகளை தொகுத்து நல்லதொரு நூல் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வணக்கம் ஸ்ரீவை சார்பில் கால்வாய் சிவா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


