தாமிரபரணி ஆற்றில் எங்கும் நிறைந்திருக்கும் ஆகாய தாமரை செடிகள் . திருநெல்வேலி மாநகராட்சி தாமிரபரணி ஆற்றை பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆனால் ஆகாய தாமரை செடிகளை அகற்ற மறுக்கிறது. ஆகாய தாமரை செடிகள் பொதுவாக தேங்கி நிற்கும் கழிவுநீரீல் தான் வளர்கிறது. கழிவுநீர் கலப்பதே மாநகராட்சி நிர்வாகம் தான். இதை கண்காணிக்க வேண்டிய பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். கொசு அதிகமாக உற்பத்தி ஆகும் இதை எழுதாத பத்திரிகை இல்லை. செய்திகள் பல செய்தி சேனல்கள் வெளியிட்டு ஓய்ந்து விட்டது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்,அதிகாரிகள், தினசரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தீன் வழியாக தினசரி செல்கிறார்கள்.கண்ணில் பட்டு இருக்கும்.6 மாத காலமாகவே இப்படி தான் இருக்கிறது. அனைவரும் பேசாமல் மெளனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
இதில் பொறுப்பு இருக்கும் அதிகாரிகள் ஏன் நழுவி ஓடுகின்றனர். ஆற்றில் உள்ள மண்னை விற்று முடித்து விட்டாச்சு. ஆகாய தாமரை செடிகளை வேறு மாநிலங்களுக்கு தேவை இருப்பதால் தாமிரபரணி ஆற்றில் வளக்கப்படுகிறதா . இங்கே இருக்கும் மண்ணை வேறு மாநிலங்களுக்கு விற்றதை போல இந்த ஆகாய தாமரை தேவை இருக்கும் போல தான் தோன்றுகிறது. டெங்கை ஒழிப்போம் பேசி திரியும் அரசியல் வாதிகளே தாமிரபரணி ஆற்றில் மதுரை நகரில் இப்படி வளர்ந்து கொசு கடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை கணக்கில் கொள்ளாமல் கடைகளில் குப்பை தொட்டி வைக்கவில்லை என்று அபதாரம் விதிக்கும் மாநகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றை கழிவுநீர், ஆகாய தாமரை செடிகளை அகற்றாமல் வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு எவ்வளவு அபதாரம் விதிக்கபடும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.
டெங்குக்காக தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற அறிவுறுத்தும் மாநகராட்சி தேங்கி கிடக்கும் கழிவு தண்ணீரில் தான் ஆகாய தாமரை செடிகள் வளரும் என்பது எப்படி தெரியாமல் போனது ஏன்? நான் இயக்க வாதியாக கேட்பது ஒரு புறம் இருந்தாலும் தினசரி இரு கரைகளில் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களில் கொசு கடியால் அவதி படுவதை நானும் அனுபவிப்பதால் அழுத்தமாக கேட்கிறேன். மாநகராட்சி கொசு மருந்து அல்ல அது வெறும் புகை அதை தெரு தெருவாக அடித்து விட்டு போன பிறகு வெளியே இருந்து கொசுக்கள் வீட்டில் புகுந்து விடுகிறது. அதற்கு அந்த புகையை போடாமல் இருக்கலாம். கைப்புன்னுக்கு கண்ணாடி தேவை இல்லை.. ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகளை உடனே தாமதிக்காமல் அகற்ற வேண்டும். குறிப்பு (கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் ஆகாய தாமரை செடிகளை பேப்பர், கப், தட்டு, கூடைகள் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்).


