நமது ஸ்ரீவைகுண்டம் டூடே வெப்சைட், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக ஆரம்பித்தாலும், எனது (முத்தாலங்குறிச்சி காமராசுவின்) எழுத்துப்பணி, புத்தகங்கள் பற்றிய தகவல்களும் உள்ளடங்கியது. சொல்லப்போனால் மிக அதிகமான தகவல்கள் என்னை பற்றியே வெளிவருகிறது. முத்தாலங்குறிச்சி காமராசு.காம் என்ற தலைப்பில் எனது புத்தகங்களை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது. இதனால் புத்தகங்களை படிக்க அமெசான் கிண்டல் மூலமும் வெளியிட்டு வருகிறோம். அதில் எனது நூலாக தலைத்தாமிரபரணி, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள், சீவலப்பேரி சுடலை, தென்நாட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் கோயில் ( ஆங்கிலம்) ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் ஆகிய நூல்கள் ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. எனவே உலக நாடுகளில் 119 நாடுகளில் இருந்து வாசகர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் தினமும் ஒரு நூலை அறிமுகம் செய்கிறோம். படித்து மகிழுங்கள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பொதிகை மலை முதல் மேலச்செவல் வரை இந்து – கிறிஸ்தவ-முஸ்லீம் ஆலய வரலாறு. இந்தப் பகுதியில் வாழ்ந்த மகான்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள்,நடந்த சம்பவங்கள் மற்றும் செவி
வழிக் கதைகள், நவகயிலாயம், நடராஜரின் பஞ்சதலங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்.
2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் மீண்டும் புதுப்பொலிவுடன் 2021 ஆம் ஆண்டு மறு பதிப்பு செய்யப்படுகிறது.


