தூத்துக்குடி மாவட்டம், ஏரல் சார்பதிவாளர் அலுவலகத்தை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் பாஜகவினர் வீதி வீதியாக உள்ள கடைகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதனின் ஆணைக்கிணங்க அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர், பாலசுப்பிரமணியன். மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலாளர் முத்துமாலை, வணிகர் பிரிவு மண்ட தலைவர் ராகவன், மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் ஏரல் பஜார் பகுதியில் உள்ள கடைகள், பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர்களிடம் சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.


