ஆழிகுடி கிராமத்தில் இலவச புற்றுநோய்க்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் நெல்லை கேன்சர் கேர் சென்டர் இணைந்து இலவச புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடி கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடந்தது.
இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி தினேஷ் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக சென்னை உதவும் உள்ளங்கள் மருத்துவ அலுவலர் அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
கிராம உதயம் இலவச மருத்துவத்துறை பொறுப்பாளர் கணேசன், கிராம உதயம் குழு தலைவர் மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிராம உதயம் ஆழிகுடி மைய தலைவர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.
இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.


