செய்துங்கநல்லூர் சுந்தரபாண்டிய சாஸ்தாகோயிலில் சித்திரை தேர் பவனி நடந்தது.
செய்துங்கநல்லூரில் உள்ள சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில்மிகவும் பழமையானது. இங்கு பங்குனி உத்திர தினவிழாவை முன்னிட்டு லட்ச கணக்கில் மக்கள் கூடுவார்கள். இந்த கோயிலில் சித்திரை திருவிழா மிகச்சிறபாக நடைபெற்றது. இதையட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அதன் பின் சுவாமிக்கும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிசேகம் , அலங்காரம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு இருந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. தக்கார் கோபாலகிருஷ்ணன் அன்னதானத்தினை துவக்கி வைத்தார். இரவு 8 மணி அளவில் சித்திரை திருவிழா சிறப்பு தேர் உள் பிரகாரத்தினை சுற்றி வரும் நிகழ்வு நடந்தது. தேர் பவனிக்காக
சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் உற்சவர் சுந்தரபாண்டியருக்கு தேரில் வைத்து சிறப்பு அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன்பின் தேர் உள் பிரகாரம் சுற்றி வந்தது. பக்தர்கள் தேரை பிடித்து இழுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் சோமசுந்தரம் செய்திருந்தார். முன்னாள் பஞ்சாத்து உறுப்பினர் வேம்பு துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


