தோரண மலை முருகனை பற்றி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முருகப்பனே என்ற பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இசக்கியப்பன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் வெளியிடு விழா சித்திரை திருவிழாவை முன்னிட்டு தோரணமலை அடிவாரத்தில் நடந்தது. இந்த பாடலை கோயில் தர்மகர்த்தா செண்பகராமன் தலைமையில் ஆவுடையானூர் மருத்துவர் தர்மராஜ் வெளியிட்டார். அதன் பின் கோயில் வளாகத்தில் இந்த பாடலின் அரங்கேற்றம் நடந்தது. தூத்துக்குடி சகா நிறுவன கலைஞர்கள் காவடி மற்றும் கும்பம் எடுத்து ஆடினர். இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியை கண்டுகழித்தனர். இதே மேடையில் இசக்கியப்பன் எழுதிய பாடலும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கோயில் தர்மகர்த்தா செண்பகராமன் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் இசக்கியப்பன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சகா கலை குழு இயக்குனர் சங்கர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.


