சாத்தான்குளம் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் சாலையில் மின்கம்பம் சரித்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து சோலார் பேனல் ஏற்றி கொண்டு கனரக லாரி சாத்தான்குளம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கு பகுதியில் புதன்கிழமை மாலை 6.45மணிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் நின்ற மின் வயரின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையில் மின்கம்பம் சரிந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக ரோந்து பணிக்காக வந்த திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா ஆகியோர் தங்கள் வந்த ஜிப்பை சாலையின் இருபுறமும் நிறுத்தி வாகனங்கள் விபத்தில் சிக்கி விடாதவாறு வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். மேலும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து உடனடியாக வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் சாலை நடுவே சரிந்து கிடந்த மின் கம்பம் மற்றும் மின்வயர்களை அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பம் மீது லாரியை மோதி சேதப்படுத்திய லாரி ஓட்டுநரிடம் சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


