தூத்துக்குடியில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கும் நிலையில், குடிநீர் விணாகி மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி டூவிபுரத்தில் சங்கரநாராயணன் பூங்கா அருகில் இருக்கும் வாட்டர் டேங்கில் இருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகிறது. இதனால் பூங்காவில் தண்ணீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் அருகில் உள்ள குழந்தைகள் படிக்கும் மையம், ரேஷன் கடை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.
கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆர்.காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.


