தூத்துக்குடி சி.வ. குளத்தினை இயற்கை குழலோடு மேம்படுத்தும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில் “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சீனா வானா குளத்தின் கரைகளை சுற்றி இயற்கை குழலோடு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு பேவர் பிளாக் கற்களும், மரங்களும், சுற்றிலும் மின் விளக்குகளும் அமைக்கப்படும் என்று ஆறு மாத காலத்திற்கு முன்பு கூறியிருந்தேன். தற்பொழுது 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெற்று வரும் பேவர் கற்கள் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்தேன் மேலும் கரையைச் சுற்றிலும் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால் வரும் நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது மண்டல தலைவர் தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் காந்திமதி, கீதா முருகேசன், பகுதி செயலாளர் அந்தோணி சிவக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


