தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் விளக்கு பகுதியில், தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்குவதனால் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் தடுப்பு சுவரில் மோதியும், இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்தும் அடிக்கடி விபத்து ஏற்ப்படுகிறது.
சாலையில் மழை நீர் தேங்காமல் எளிதில் வெளியேற இருபுறமும் அமைக்கப்பட்ட வடிகாலானது சாலையின் உயரத்தை விட கூடுதல் உயரத்தில் இருப்பதே இந்த நிலைக்கு காரணம்.
மேலும் வசவப்பபுரத்தில் தென்புறம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தம் முன்பாக உள்ள அனுகு சாலையில் மிக பெரிய பள்ளம் ஏற்ப்பட்டுள்ளதால் அதிலும் மழை நீர் தேங்கி விடுகிறது, இதில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மாட்டி கொள்கிறார்கள்.
மேலும் வசவப்பபுரம் பகுதியில் அதிக விபத்துக்கள் நடப்பதனால் எக்விடாஸ் வங்கி அருகே உள்ள வளைவுகளிலும்
நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கும் விதமாக விளக்கு பகுதியில் உள்ள சாலை வளைவுகளில் அதிக அளவு எச்சரிக்கை விளக்குகள் அமைக்கபட வேண்டும் என்றும், அடுத்ததாக திருநெல்வேலி மாவட்டம் KTC நகர் பகுதியில் செல்லும் கன்னியாகுமரி முதல் கஸ்மீர் வரை செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து, தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள (சர்வீஸ் ரோடு)அனுகு சாலையானது மாதா மாளிகை அருகே உள்ள கத்தோலிக்க பிஷப் இல்லம் வரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் சாரதா மகளீர் கல்லூரி வரை திருநெல்வேலி மாநகராட்சி எல்லை உள்ளது.
இதனால் வல்லநாடு, வசவப்பபுரம் மற்றும் சுற்றுபுற 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள்KTC நகர் பகுதியில் உள்ள ரோஸ்மேரி பள்ளிகூடம், ஓயாசீஸ் பள்ளி கூடம், பெட்ரோல் நிலையம், திருமண மண்டபங்கள், TMB வங்கி மேலும் கட்டிட வேலை மற்றும் பிற வேளைகளுக்காக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வருபவர்களும், மேற்க்கில் இருந்து கிழக்கு நோக்கி கிராமபுரம் மற்றும் தூத்துக்குடி பகுதிக்கு வருபவர்களும்,KTC நகர் பஸ் டிப்போ வரை சென்று சுற்றி வராமல் ஒரு வழி பாதையில் விதிகளை மீறி எதிரெதிரே அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படுவதனால், தினமும் 10க்கும் மேற்ப்பட்ட சிறு சிறு விபத்துக்கள் நடக்கிறது.
இதனால் இருபுறமும் சரியான பாதையில் பயணிப்பவர்களும் மிகுந்த கவனத்துடனும் அதீத பயத்துடனுமே அந்த குறிப்பிட்ட பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் கோர விபத்து ஏற்ப்படும் சூழல் உள்ளது.
எனவே கத்தோலிக்க பிஷப் இல்லம் வரை மட்டுமே சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள அணுகு சாலையை (சர்வீஸ் ரோடு) சாரதா மகளீர் கல்லூரி வரை நீட்டித்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் அலுவலகத்துக்கு வசவப்பபுரம் மு.கணேசன் ஆகிய எனது சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும், வாகன ஓட்டிகள் சார்பாகவும் இன்று 17.11.2022 அன்று கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
பதிவு : வசவப்பபுரம் மு.கணேசன்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்,நேதாஜி சுபாஷ் சேனை
7502881898


