வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பேரணி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரைப்படி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு வல்லநாடு தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன் சிவசங்கரி, வெயில்முத்து, சிறப்பாசிரியர்கள் கிரேனா, காளியம்மாள், கலைச்செல்வி நிஷா மேரி, சிறப்பு ஆசிரியர் ஐடா, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்கள், சிறப்பு குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்காக விழிப்புணர்வு பேரணி ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜெய மேரி அற்புதம் செய்திருந்தார்.


