தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சிரியந்தூர் கிராமம்.
இந்த கிராமத்தில் இருந்து சிவந்தி பட்டி வழியா பாளையம்கோட்டைக்கு செல்லும் சாலையில் உள்ள 3 பாலங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டதால் அவற்றை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது,
இந்நிலையில் பாலம் அமைக்கும் பணி கடந்த ஒராண்டுக்கும் மேலாக கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
வசவப்பபுரம் மு.கணேசன்


