கொங்கராயகுறிச்சியில் மிலாது நபி சமய நல்லிணக்க விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் உள்ள பள்ளிவாசலில் மிலாதுநபி சமய நல்லிணக்க விழா மற்றும் போதி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போதை ஒழிப்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் அரசு ஹாஜி முஜீபுர் ரஹ்மான் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர்.
பின்னர் நடைபெற்ற மீலாதுநபி சமய நல்லிணக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஹாமித் பக்ரீ தலைமை வகித்தார்.
ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சிறப்புரையாற்றினார்.
அதன்பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில்,
இன்றைக்கு கிராமப்புறங்களில் கூட கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையாகி பள்ளிகளின் அருகேயும் கிடைக்கின்றன. இந்தியா முழுவதும் எளிய மக்கள் பாதிக்கப்படும் அவலம் அதிகரித்துக் கொண்டிருக்கிற சூழலில் சட்டம் போட்டு தடுப்பதை விட மக்கள் இதை உணர வேண்டும் இதனால் ஏற்படுகிற பாதிப்புகளை உணர வேண்டும் இளம் தலைமுறையினர் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்கப்பட வேண்டும். நல்ல சமூகம் வேண்டும் நல்லிணக்கமான சமூகம் வேண்டும் அனைத்து தரப்பு மக்களும் நலமோடு வாழ வேண்டும் என்கிற அந்த உயர்ந்த எண்ணத்தை பண்பை இஸ்லாம் கற்றுக் கொண்டிருக்கிற காரணத்தினால் தான் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காவி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான உடையாக இல்லை. பௌத்த மதத்தைச் சார்ந்த துறவிகள் கூட காவியை உடுத்துகிறார்கள். காவி உடை என்பது நல்லிணக்கத்திற்கான உடை. நல்லுறவுக்கான உடை நல்ல பண்பின் அடையாளம். இன்றைக்கு சமூக கட்டமைப்பிலே தனித்தனி மனிதர்கள் சிதறி கிடக்கிற நிலை. குடும்பத்திற்குள்ளே அண்ணன் தம்பிகள் இடையே கூட சகோதரத்துவம் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு இடையிலும் உயர்வு தாழ்வு இருக்கிறது. சகோதரத்துவத்தை உயர்த்தி பிடிப்பதால் தான் சமத்துவம் மலர்கிறது. சகோதரத்துவத்தை மறுக்கிற இடங்களில் சமத்துவம் வளராது. இஸ்லாம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. சமூக நீதி என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டதன் மூலம் வேலை வாய்ப்பு போன்ற அதிகார பகிர்வு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புகளும் முன்னுரிமை கொடுத்து கல்வியில் வேலை வாய்ப்பு வழங்குவது பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக அல்ல. அது அடிமை உணர்விலிருந்து விடுபடுதலாகும். என்றார் அவர்.


