செய்துங்கநல்லூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் அல்ஹதா கல்வி அறக்கட்டளை அல் மதரஸத்துல் புகாரியா இணைந்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது.
இந்த விளையாட்டுப் போட்டியினை முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் மதரஸா கமிட்டி உறுப்பினர் ரியாஸ் தலைமை வகித்தார். ஜமாத் துணைத் தலைவர் அன்வர், ஜமாத் பொருளாளர் அசாப் சாஹிப், ஜமாத் கமிட்டி உறுப்பினர் சிந்தா ஷேக் அப்பாஸ், வார்டு உறுப்பினர் அபு, பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
100க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் வெற்றி பெற்ற முதல் மூன்று பரிசை தட்டிச்சென்ற சிறார்களுக்கு ஆல் இந்தியா தமிழன் குரூப்ஸ் தலைவர் சிகான் சங்கர், முத்துமாலை ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்கள்.


