திருநெல்வேலியில் “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கத்தின் சார்பில் ஒரே நாளில் 300 மரங்கள் நடும் பணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட கேடிசி நகரை “எழில்மிகு பசுமைமிகு” கேடிசி நகராக மாற்றுவதற்காக கங்கைகொண்டான் டிபி சோலார் நிறுவனம், கே டி சி நகர் நடைப்பயிற்சி நண்பர்கள் குழுவினரின் “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கம் மற்றும் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகரில்மரம் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நடைப்பயிற்சி நண்பர்கள் குழு “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே லெனின், தலைமை தாங்கினார்.மேலும் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார்,
மணிமாறன், வேலாயுதம், சின்னத்துரை, இமாம், வேல்பாண்டி, இளங்கோ, மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக கங்கைகொண்டான் டிபி சோலார் நிறுவனத்தின் அதிகாரி மரியதாஸ் கலந்து கொண்டு மரம் நடும் பணியை துவக்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து கேடிசி நகர் எட்டாவது மெயின் தெருவை சேர்ந்த நண்பர்கள் ஒரு அணியாகவும், மகராசி திருமண மண்டபத்தின் முதல் சாரதா காலேஜ் நெடுஞ்சாலையில் ஒரு அணியாகவும், கேடிசி நகர் பஸ் ஸ்டாப் மற்றும் அஷ்டலட்சுமி நகர் பார்க் பகுதியில் ஒரு அணியாகவும், மூன்று அணிலாகப் பிரிந்து அப்பகுதிகளில் மரம் நடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்
இதில் தன்னார்வலர்கள் அன்பு (எ) அங்கப்பன் கார்த்திக், நைனார், ஜெயசேகர், கண்ணன், சுரேஷ், பழனியப்பன், காமாட்சி நகர் நல சங்க நிர்வாகிகள் வீரபாகு, சக்திவேல், பக்கப்பட்டி மணிகண்டன்,தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், லீடூ டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, கல்லூரி மாணவர்கள் மேலும் 15க்கும் மேற்பட்டோர் சமூக ஆர்வலர்கள் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி காலை 6:00 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் 6 அடி முதல் 12 அடி வரையிலான 300 மரங்கள் நடப்பட்டது. மேலும் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடைப்பயிற்சி நண்பர்கள் குழுவினரின் “விதைப்போம்” “வளர்ப்போம் ” இயக்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்


