கருங்குளம் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறுவள மைய அளவில் ஐந்தாம் கட்ட பயிற்சி நடந்தது. இப்ப பயிற்சியில் தொடக்கநிலை மாணவர்களை கையாளும் தொடக்க நிலை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் உயர் தொடக்க நிலையில் உள்ள தொடக்கநிலை மாணவர்களை கொண்ட தன்னார்வலர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு கற்றல் கற்பித்தலை மேம்படுத்தவும், அடிப்படைத் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கவும், குறைதீர் கற்பித்தல் பற்றியும், எண்ணும் எழுத்தும் பற்றியும் விளக்கம் அளிக்க பட்டது. இப்பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம், இல்லம் தேடி கல்வித் தன்னார்வல ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ், வட்டார இல்ல தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பீபேகம். ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், சிவசங்கரி, வெயில் முத்து ஆகியோர் செய்திருந்தனர். கருங்குளம் வட்டார ஆசிரியர்கள் குறுவள மைய அளவிலான இப் பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்பட்டனர். 160 தன்னார்வலர்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.


