வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாணவ மாணவிகளுக்கு இலவச மிதி வண்டியை வழங்கினார். தொடர்ந்து சாயர் புரம் வட்டார அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார். கருங்குளம் ஒன்றிய குழு தலைவர் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் ஒன்றிய திமுக வட்டார தலைவர்கள் ராமசாமி, சுரேஷ்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் வல்லநாடு சந்திரா முருகன், எல்லைநாயக்கன் பட்டி சின்னத்தம்பி, வல்லநாடு துணை தலைவர் சுப்புலெட்சுமி, கவுன்சிலர் முத்துராமலிங்கம், சீனி பிரசாத், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடசுப்பு, விவசாய சங்க தலைவர் சின்னத்துரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாதர் வெள்ளை, பள்ளி மேலான்மை குழு தலைவர் பேச்சியம்மாள், உறுப்பினர் நங்க முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். முதுகலை தமிழாசிரியர் லட்சுமி வரவேற்றார். முதுகலை ஆசிரியர் உதயவாணி நன்றி கூறினார். இவ்விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ரவி மற்றும் கணிணி அறிவியல் ஆசிரியர் பொன் ராஜ் ஏற்பாடு செய்தார்.


