தாமிரபரணி ஆற்றுக்கரையில் மண்ணரிப்பை தடுக்கவும் தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் டிபி சோலார் நிறுவனம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுக்கரையில் மரக்கன்றுகள் நடும்பணி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதாசீனிவாசன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜ்கமல், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சீனிவாசன், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார் மற்றும் மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 10 முதல் 15 அடி உயரமுள்ள 110 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் ஆகியோர் செய்தனர்.


