தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள சிவகளை நாடார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (66). இவர் சிவகளை நடுத்தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். இன்று காலையில் கடையை திறக்க வந்த பொழுது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கல்லாவில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் ஏரல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


