ஆறாம்பண்ணையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
இந்த கிராமசபை கூட்டத்திற்கு ஆறாம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக்அப்துல்காதர் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கென்னடி, மக்கள் நல சங்கத் தலைவர் சையத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பற்றாளர் சாந்தி, கிராம செவிலியர் சதாசிவத்தம்மாள், ஹெல்த் இன்ஸ்பெக்டர் அருணாசலம், விவசாயத்துறை சேர்ந்த வெங்கடேஷ், கிராம நிர்வாக உதவியாளர் சரத்குமார், நியாய விலை கடை ஊழியர் சீனி, அங்கன்வாடி பணியாளர் கோமதி, மகளிர் சுய உதவி குழு ஊக்குனர் பிரதிநிதிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணித்தள பொறுப்பாளர் ஜீவா, மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சி செயலாளர் ஹரிஹரசுந்தரம் நன்றி கூறினார்.


