திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சார்பில் இன்று திருநெல்வேலியில் உள்ள ரோஸ்மேரி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொருநை நதி நாகரீகம் தொடர்பான மரபு நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மரபு நடை பயணத்தை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சத்தியவள்ளி தலைமையேற்று நடத்தினார்.
இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட வருகை தந்தனர்.
அவர்களுக்கு ஆய்வாளர் எதீஷ்குமார் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் விளக்கமளித்தார். இந்நிகழ்வில் ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளியின் வரலாற்று ஆசிரியர் நிர்மலா உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


