காமநாயக்கன்பட்டியில் வீரமாமுனிவர் மணி மண்டபத்திற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் தமிழ்த் தொண்டாற்றியவர் வீரமாமுனிவர் அவர்களை போற்றிடும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மணி மண்டபத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிடோர் உடனிருந்தனர்.


