தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் கால்நடை மருத்துவமனையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கினார்.
தமிழகத்தில் இலவச கறவை மாடு பெற்று அதை நன்றாக பராமரித்து வரும் பயனாளிகளுக்கு கால்நடைதுறை சார்பில் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கப்படுகிறது.
கருங்குளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் பயனாளிகளுக்கு கன்று பராமரிப்புட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ஜோசப்ராஜ், உதவி மருத்துவர்கள் அங்கப்பன், தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு 22 பயனாளிகளுக்கு கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சங்கர், நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், கருங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன், கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இசக்கி பாண்டியன், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், நடராஜன், ஹரிதாஸ், ராமர், சித்தார்த்தன், மாரி செல்வம், முத்துகிருஷ்ணன், வனிதா ஸ்டாலின், ராமர், மாரியப்பன், டைகர் மணி, வெள்ளத்துரை, பொன் கிருஷ்ணன், கண்ணன், அழகு, பொன்பாண்டி, ஹரி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


