திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் எல்.எஸ்.மகாலில் தமிழத்தேசத் தன்னுரிமைக் கட்சி தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மொழிப்போர் தியாகி வியனரசு தலைமை வகித்தார். அரியமுத்து, பேராசிரியர் தொ.பரமசிவன், பேராசிரியர் அறிவரசன் படங்கள் திறந்து வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் தாமிரபரணி குறித்து ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். அவருக்கு பொருநை தமிழ்க்காவலர் விருது வழங்கப்பட்டது. தமிழில் 100 மதிப்பெண் எடுத்த திருச்செந்தூர் மாணவி துர்கா, எழுத்தாளர் முனைவர் அருகோ உள்பட சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விருதுகளை நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழர் சீமான் வழங்கி சிறப்புரையாற்றினார். வரதை செல்வம் நன்றி கூறினார். இந்த மாநாட்டில் காலை மாலை நடந்த அமர்வில் அறிஞர்கள் கருத்துரை வழங்கினார்கள்.


