பக்கப்பட்டியில் கலைஞரின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் மற்றும் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டியில் கருங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தி.மு.க.கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி வரவேற்றார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கால்வாய் இசக்கிபாண்டியன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி, கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ், முன்னாள் யூனியன் சேர்மன் பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத்தொடர்ந்து மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஊனமுற்றோருக்கான மூன்று சக்கர சைக்கிள், தையல்மிஷின், அயன்பாக்ஸ், விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் கருவிகள், அரிசி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.
அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்தநிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நல உரிமைபிரிவு துணை அமைப்பாளர் கலீலூர் ரஹ்மான், பக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், வட வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் பேபி சங்கர், செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி நாதன், ஆறாம்பண்ணை ஊராட்சி மன்றத்தலைவர் சேக் அப்துல் காதர், முறப்பநாடு கோவில்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நேரு, வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன், கருங்குளம் ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ், ஒன்றிய கவுன்சிலர் மைமூன் அப்துல் ஹரீம், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, குமாரசாமி, கண்ணன், மாசிலாமணி, மாரிமுத்து, சொக்கலிங்கம், முத்துலட்சுமி, கிளைச் செயலாளர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணைச்செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ் செய்திருந்தார்.


