தமிழகம் முழுவதும் இன்று கொரோனா நோய் தொற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் நடைபெறும் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை பார்வையிட மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் நேரில் வருகை தந்தார். அவர் கொரோனா நோய் தொற்று சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்களிடம் முகாம் குறித்து கேட்டறிந்தார்.
அவருடன் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தினேஷ், மருத்துவர்கள் பொன் இசக்கி, வெங்கடேஸ்வரன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


