தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 75 பேரை இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி தூத்துக்குடி வடபாகத்தில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாமகேசுவரி மத்தியபாகத்துக்கும், வடபாகம் வீரபெருமாள் சிப்காட்டுக்கும், மத்தியபாகம் அப்பாதுரை தட்டப்பாறைக்கும், மத்தியபாகம் முத்துராஜா புதியம்புத்தூருக்கும், தென்பாகம் சதீஷ்குமார் தெர்மல் நகருக்கும், திருச்செந்தூர் சங்கர் ஏரலுக்கும், ஸ்ரீவைகுண்டம் அருள் மோசஸ் நாசரேத்துக்கும்,
சூரங்குடி நாராயணசாமி எப்போதும் வென்றானுக்கும், கோவில்பட்டி மேற்கு காளிப்பாண்டி கயத்தாருக்கும், குளத்தூர் சக்திவேல் தருவைகுளத்துக்கும், தென்பாகம் சுதாகர் பாலசிங் மாசார்பட்டிக்கும், மத்திய போக்குவரத்து முருகன் குரும்பூருக்கும், கோவில்பட்டி வீரக்குமாரி கடம்பூருக்கும், தருவைக்குளம் பரமசிவன் மெஞ்ஞானபுரம் உள்பட 75 பேர் மாற்றப்பட்டு உள்ளனர்.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பணியில் இணைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 75 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மாவட்டக் காவல் துறை வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.


