தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் 81-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஆதித்தமிழர் புரட்சிக் கழகம் சார்பில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய சமூக சீர்திருத்தவாதி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 81-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினரும் தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு , போல்டன்புரம் பகுதியில் உள்ள இரட்டைமலை சீனிவாசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தி.மு.க. வட்டச் செயலாளருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் முத்துவேல், கட்சி நிர்வாகிகள் ராமர், பேச்சிமுத்து மற்றும் பறையர் பாதுகாப்பு பேரவை, ஆதித்தமிழர் புரட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் தி.மு.க.வினர் திரளாகக் கலந்து கொண்டனர்.


