ஆலயத்திற்க்கு பெரிய வெண்கல மணி
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கே மகிமையான ஒன்று ஆலய மணி ஓசை பல வருடங்களாக ஆலயத்திற்கு வட்டு மணி உபயோகப்பட்டு வந்தது. 2002-ல் திரு. V.மோசஸ் அவர்கள் பெரிய வெண்கல நாக்கு மணி நேர்ச்சையாக வாங்கி வைத்தார்கள் ஆலயத்திற்கு மகிமையாகவும் தேவனுடைய நாமத்திற்கு மகிமையாகவும் இன்றும் ஒலித்து வருகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
கீ போர்டு
ஆலயம் நிரம்ப ஆண்களும் பெண்களும் வாலிபர்கள் சிறுவர்களுமாக தேவனைப் பாடல் பாடி உற்சாகமாக ஆராதித்து வந்த வேளையில் 2014 ஆவது ஆண்டு சகோதரர் D.மனோகர் அவர்கள் ஆலய உபயோகத்திற்காக YAMAHA I455 KEY BOARD வாங்கித் தந்தார்கள். அதை இசைக்க விரைவாக J.டைசன் கற்றுக் கொண்டு ஆலய ஆராதனையில் உபயோகப் படுத்தப்பட்டது. இப்போது எல்லா ஆராதனைகளிலும் இசைத்தும் சபை பிள்ளைகளுக்கு இலவசமாக இசைப் பயிற்சி கற்றுக் கொடுத்தும் J.சுவீட்டி யால் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக உபயோக படுத்தப்பட்டு வருகிறது.
சுவிசேஷ ஊழியம்
செப்டம்பர் மாதம் வருடா வருடம் மூன்றாவது வாரம் பக்கத்து கிராமங்களுக்குச் சென்று கைப்பிரதி கொடுத்துப் பாடல் பாடி சாட்சி சொல்லி பிரசங்கம் பண்ணி விரும்புகிறவர்களுக்கு ஜெபித்து தேவனுடைய நாம மகிமைக்காக ஆண்கள் பெண்கள். சிறுவர்கள் என்று அனைவரும் கர்த்தர் கொடுத்த தாலந்துகளைப் பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார்கள். ஆரம்ப காலங்களில் நடந்து சென்று ஆரம்பித்த ஊழியம் இப்போது வாகனங்கள் ஒலிபெருக்கிளோடு சென்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
V.B.S
கர்த்தருடைய கிருபையால் கடந்த பத்து ஆண்டுகளாக நமது ஆலயத்தில் மே மாதத்தில் 10 நாட்கள் விடுமுறை வேதாகம பள்ளி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளுக்கும் நோட்டு புத்தகங்கள், மதிய உணவு கொடுக்கப்படுகிறது. நிறைவு நாளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பு பரிசுகள் கொடுத்தும் பிள்ளைகளை இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றும் வருடா வருடம் தேவனுடைய நாமம் மகிமைக்காக ஊழியம் நடைபெற்று வருகிறது.
ஆலய வளாகத் தோட்டம்
ஆலயத்தை சுற்றி 1998 -ல் சுற்றுச்சுவர் கட்டிய பிறகு ஆலய வளாகத்துக்குள் நல்ல நிழல் தரும் மரங்களை P.பவுல்ராஜ் (பூவலிங்கம் அவர்கள் உதவியோடும் அழகிய பூஞ்செடிகளையும் வைத்து ஆலய வளாகத்தில் அழகு சேர்க்கும் வண்ணம் P.டேனி பராமரித்து வந்தார். அதைத் தொடர்ந்து ஆலயப் பணியாளர்கள் பராமரித்து வந்தும் அதோடு சேர்த்து தென்னை, சவுக்கு மரங்கள் வைத்து M.சிலுவை பராமரித்து வருவது ஆலய வளாகத்தின் சிறப்பு.
தெருக்களில் பவனி
தேவனுக்கு மகிமையாக நமது கிராமத்தின் தெருக்களில் சபையார் பவனியாக பாடல் பாடி குருத்தோலை, ஞாயிறு, பாலர் ஞாயிறு, கிறிஸ்மஸ் தாத்தா பவனி என்று மகிழ்ச்சியோடு தெருக்களில் சுற்றி வருவது மகிழ்ச்சியான ஒரு ஊழியம். லெந்து காலங்களில் ஆங்காங்கே பிரசங்கம் செய்து அந்தந்த பகுதியில் உள்ள சபையின் குடும்பத்தினர் ஐக்கிய விருந்து கொடுத்து ஊழியத்தை உற்சாகப்படுத்துவது சிறப்பு.
புதுப்பிக்கப்பட்ட ஆல்டர்
1975 ல் ஆலத்திற்கு ஆல்டர் பகுதி கட்டப்பட்டது. சபை வளர்ச்சிக்குத் தக்க திருவிருந்து எடுப்பதற்கு வசதியாக ஆல்டர் புதுப்பிக்கப்பட வேண்டயதிருந்தது. 2020.ம் ஆண்டு D.ஜோசப் குடும்பத்தரால் ஆல்டர் பகுதியில் தரை மற்றும் கிராதி புதிய முறையில் புதுப்பிக்கப்பட்டு மேட்டுகள் விரிக்கப்பட்டு ஆலயத்தின் மகிமைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆலயத்தொனி பத்திரிக்கை
ஆலயங்களில் நடைபெறும் எல்லாக் காரியங்களையும் சபையார் அறிந்துக் கொள்ளும் வசதியாக ஆலயத்தொனி என்ற புத்தகம் 2016 ஆம் ஆண்டு மாதாமாதம் வெளியிடப்பட்டது. தற்ச்சமயம் வாட்ஸ் அப் சர்ச் குரூப்பில் தகவல் வெளியிடப்படுவதால் புத்தகம் வெளியிடப்படவில்லை.
(தொடரும்)


