பிரெஞ்சு பொலினீசியா தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிரெஞ்சு கடல்கடந்த கூட்டமைப்பாகும். இது பிரபலமானதும் மக்கள் தொகையை அதிகமாகக் கொண்ட சொசைட்டீ தீவுக் குழுமத்தின் டெஹீட்டி உடபட சில பொலினீசிய தீவுக்குக்ழுமங்களை உள்ளடக்கியது. இம்மண்டலத்தின் தலைநகரம் பபீட்டீ டெஹீட்டி தீவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் ஒன்றிணந்த பகுதியாக இல்லாவிடாலும் 2007 ஆம் ஆண்டு வரை கிளிப்பிற்றோன் தீவு பிரெஞ்சு பொலினீசியாவை மையமாகக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.


