சாத்தான்குளத்தில் வழிதவறி ஊருக்குள் நுழைந்த புள்ளி மானை வனத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ளது. இவர் தோட்டத்துக்கு சென்றபோது அங்கு புள்ளிமான் ஒன்று ஓடியது தெரியவந்தது. உடன் அவர் சாத்தான்குளம் தீயணைப்பு நிலையம், மற்றும் திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே மான் தோட்டத்தில் இருந்து வெளியேறி ஓடியது. அப்பகுதியில் நின்ற பொதுமக்களிடம் மானை பிடிக்க முயன்றனர்.
தகவலின் பேரில் திருச்செந்தூர் வனத்துறை ரேஞ்சர் சங்கர், சாத்தான்குளம் தீயணைப்¢பு நிலைய அலுவலர் மாரியப்பன், ஏட்டு ஹாரீஸ் தாமஸ் செல்வபாபு, வீரர்கள் சங்கரலிங்கம், மாணிக்க சீனிவாசன், சுப்பிரமணியன், துரை ஆகியோர் வந்து மானை விரட்டி பிடித்தனர். பின்னர் வனத்துறையினர் பாதுகாப்புடன் வனப்பகுதியில் விடுவதாக மானை எடுத்து சென்றனர்.


