தூத்துக்குடியில் நடைபெற்று வந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு 25.04.2022 முதல் 02.05.2022 வரை தூத்துக்குடி புதுக்கிராமம் கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெறுவதாக அறிக்கப்பட்டு 25.04.2022 முதல் 27.04.2022 வரை ஆகிய மூன்று தினங்கள் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெற்று உள்ளது
தற்போது கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 28.04.2022 முதல் 02.05.2022 வரை நடைபெற இருந்த கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து நேர்காணல் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரர்கள் எவரும் 28.04.2022 முதல் 02.05.2022 வரை நடைபெற இருந்த நேர்காணலில் கலந்துக் கொள்ள வேண்டாம் எனவும் நேர்காணல் குறித்து புதிய தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


