வரகவி வீரபாண்டிய புலவர் என்னும் சங்கர மூர்த்தி புலவர் இயற்றிய ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ் மற்றும் இசை வெயியீடு விழா தூத்துக்குடி டி.ஏ,. திருமண மண்டபத்தில் வருகிற 17 ந்தேதி திங்கட் கிழமை காலை 9.45 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீசாரதா கலைக்கூடம் மாணவ மாணவியர் இறை வணககம் பாட, ஸ்ரீசாரதா களிக்கூடம் கௌரி ராஜசேகர் வரவேற்கிறார். திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை இணை இயக்குனர் திட்ட இயக்குனர் ஆ. பழனி தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி. சி.வி. சண்முகம் முன்னிலை வகிக்கிறார். செங்கோல் மட ஆதினம் அருளாசியுரை ஆற்றுகிறார். அழகர் பள்ளி சேர்மன் ஜெயராமன், டி.-ஏ. திருமண மண்டபம் தெய்வநாயகம் ஆகியோர் மகிழுரையாற்றுகிறார். பே.சங்கரலிங்கம் நூல் குறித்த விளக்கவுரையாற்றுகிறார்கள். சாந்தி ரவிபாலன் பேசுகிறார். சாகித்ய அகாதெமி விருதாளர் சோ.தர்மன் சிறப்புரையாற்றுகிறார். ஸ்ரீ பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ நூல் வெளியிடுபவர்கள் ஜெயராமன், ராதா கிருஷ்ணன் ஆகியோர் வெளியிடுகிறார்கள். எழுத்தாளர்கள் நா. மம்மது, சோ.தர்மன், நாறும்பூ நாதன், பே, சங்கரலிங்கம், முத்தாலங்குறிச்சி காமராசு, இளமுருகு ஆகியோர் பெற்று கொள்கிறார்கள்.
ஸ்ரீபாகம்பரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமமேஸ்வரர் ஆலயத்திற்கான இசை வெளியீடு தொடர்ந்து நடைபெறுகிறது. செங்கோல் மட ஆதினம் வெளியிட தூத்துக்குடி ஆலால சுந்தரவேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் செல்வம் பட்டர் பெற்றுக்கொள்கிறார். குருந் தகடை எ.வி.சி.வி. சண்முகம் டி.ஏ தெய்வநாயகம் வெளியிட திட்ட இயக்குனர் பழனி பெற்று கொள்கிறார். வலையளியில் கேசவன் வெளியிட சுப்ரமணியன், ரகுவரன் பெற்றுக்கொள்கிறார்கள். வானொலியில் பத்மநாபன் வெளியிட ராதா கிருஷ்ணன், மு.வெ.ரா ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள். திருநெல்வேலி கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூததுக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை யாசிரியர் சிவகாமசெல்வி, தமிழிசை ஆய்வாளர் மம்மது, எழுத்தாளர் நாறும்பூ நாதன், முத்தாலங்குறிச்சி காமராசு, இளமுருகு, தூத்துக்குடி அகில இந்திய வானொலி நிகழச்சிப் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், வனச்சரக அலுவலர் ரகுவரன், வெற்றி அறக்கட்டளை நிறுவனர் கதிரேசபாண்டியன், சுகாதார அலுவலர் ஹரிகணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கலர் வளர்மணி உமா மாணிககம் சிவாஞ்சலி நாட்டியாலயா மாணவிகள் பரதநாட்டியம் நடைபெறும். அழகர் ஜுவல்லர்ஸ், தலைமையாசிரியை வள்ளி முத்தையா, வேம்பார் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன், இசையமைப்பாளர் கோல்டுவின், வில்லிசைகலைஞர் ஜெயலலிதா, சுப்புராஜ், மாரீஸ்வரன், பேராசிரியர் சுகா சங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள். கலைவளர்மணி ம. இசக்கியப்பன் ஏற்புரையாற்றுகிறார். எழுத்தாளர் மு.வெ.ரா தொகுத்து வழங்குகிறார்.
&&


