திருச்செந்தூர் முருகன் கோயிலை பொறுத்தவரை நடைபயணமாக செல்லும் பக்தர்கள் மிக அதிமாக செல்வார்கள். இந்த ஆண்டு வெள்ளிகிழமை தை பொங்கலும் அதை தொடர்ந்து வருகிற செவ்வாய் கிழமை தை பூசத்திருவிழாவும் நடைபெறுகிறது. இதற்கிடையில் வெள்ளி சனி ஞாயிறு கோயில் திறப்பு கிடையாது. மேலும் தை பூசத்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நடைபயணம் செல்லும் பக்தர்கள் இன்றைக்குள் கோயிலுக்கு சென்று திரும்பி வர ஏற்பாடு செய்து வருகின்றனர். நடைபயணம் செல்லும் பக்தர்கள். அலகு குத்தி செல்லும் பக்தர் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள், சர்ப்ப காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் என அனைவரும் இன்றைக்குள் கோயிலுக்கு சென்று சேர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கிடையில் தென்காசி மாவட்டம் குருக்கல் பட்டியில் இருந்து பக்தர் இருவர் பறவைகாவடி எடுத்து வந்தார். வாகனத்தில் அந்தரத்தில் முதுகில் கொக்கி மாவட்ட தொங்கியபடி வந்த அந்த பக்தரை அனைவரும் பக்தியுடன் வணங்கினர். அதன் பக்தர்களோடு பறகை காவடி எடுத்து சென்ற நபர் திருச்செந்தூரை நோக்கி சென்றனர்.
முருகனை காண தன்னை வருத்தி செல்லும் பக்தர்களுக்கு இந்த வருடம் தொடர் கொரோனா பிரச்சனையால் தை மற்றும் தை பூசத்தில் செல்ல இயலாவிட்டாலும் கூட கண்டிப்பாக நேர்ச்சையை நிறைவேற்ற முதல் நாளே சென்று தங்கள் நேர்ச்சையை நிறைவேற்றி உள்ளார்கள்.


