பாத யாத்திரையாகவும், பொது தரிசனத்தில் வருவோருக்குமே முழுமையாய் அருளையும், ஆசிர்வாதமும் அள்ளித்தரும் திருச்செந்திலாண்டவன்.. (அன்பின் மிகுதியாலும், பாலகனாய் காண்பதாலும் எங்கள் முருகப் பெருமானை செந்திலாண்வர் என்று அழைக்காமல் செந்திலாண்டவன் என்றே அழைக்கிறோம்)..
திருச்செந்தூர் பக்தர்கள் செல்லும் வரிசைகள்..
1) பொது தரிசனம்
2) 100 வி.ஐ.பி. தரிசனம்
3) 250 வி.வி.ஐ.பி. தரிசனம்
4) அ, ஆ.. தரிசனம். அதென்ன
அ, அ & ஆ – அர்ச்சகர், அமைச்சர், ஆட்சியர் தரிசனம்..
(இதை படிக்கும்போது சிரிப்போடு கோபமும் வரும் பலருக்கு)
இதில் 4வது தரிசனம் கோவிலுனுள் சென்று நேரே எம்பெருமான் முன் நிற்க வைத்தோ உட்கார வைத்தோ யாரோ ஒரு பக்தர் சுவாமிக்காக மனமுருகி வழங்கிய பூமாலையை இவர் கழுத்தில் போட்டு 1 நிமிட தரிசனத்தில் மொத்தத்தில் பத்தே நிமிடத்தில் கோவில் வெளியில் தள்ளி விடுவார்கள்.
2,3வது வரிசை முருகனை காணாமலே வரிசையில் நின்று அர்ச்சகர்கள் படை இருக்கும் பகுதி இதுதான். அதை கடந்து 100ரூ வரிசையும் 200 ரூ வரிசையும் ஒன்றோடு ஒன்று கலந்து சண்டைபோட்டு அந்த சண்டை போட்ட மன அழுத்தத்தோடு முருப்பெருமானை சில விநாடிகளவிலே தரிசனம் செய்து (அதுவும் வி.வி.ஐ.பி. மறைத்தும் மறைக்காமலும் ) தரையில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் மனதினுள்ளே உள்ள கோபத்தை வெளிக்காட்டாமல் முருகனை கண்டதால் திருப்தியடைந்து வெளியேற்றம்.
பொது தரிசனம்…
பாதயாத்திரையாய் பயபக்தியுடன் வருபவர்கள்,
பஸ்சிற்கு மட்டும் காசை வைத்துக்கொண்டு கஷ்டங்கள் தீர கந்தபெருமானை கண்டால் மட்டும் போதுமென்று வருபவர்கள், கந்தனுக்கு மாலை போட்டு வருபவர்கள் இவர்களனைவரும் விரும்பும் தரிசனம்.. வரிசையில் நிற்கும்போதே சஷ்டி கவசம் முழுமையாய் பாராயணம் செய்து, முருகா முருகா என்று மனமுருகி வேண்டி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று சரணகோசங்கள் போட்டு இரு பிரகாரங்கள் கடந்து உள்ளே நுழைந்தவுடன் சக்கரவர்த்தியிடமிருந்து நேராக 30 அடி தூரம் வரை உயரமான பலகையில் வரிசையாக சுப்பிரமணிய சுவாமியைக் கண்டவாறே வந்து மீண்டும் அதே தூரம் எம்பெருமானை பார்த்தவாரே சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் சுப்பிரமணிய சுவாமியின் பார்வையிலேயே இருந்து அருளை அள்ளி அள்ளி கண்குளிர, ஆனந்தக்கண்ணீர் மல்க தரிசனம் செய்வார்கள்.. கோவிலின் உள்ளே ஒன்று முதல் மூன்று மணிநேரம் வரை கோவிலின் நல்ல அதிர்வலைகளில் மெய்மறந்து அணு அணுவாய் கோவிலை வணங்கி போவார்கள்
இதுவல்லவோ பக்தி..??????
இப்போ சொல்லுங்கள்..
உங்களுக்கு எந்த தரிசனம் வேண்டுமென்று….
தாசில்தாராக அல்ல பக்தனாக நான் விரும்புவது பொது தரிசனமே..
நன்றிகளுடன்
இரா.கோபாலகிருஷ்ணன்


