
இன்றைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாகவும் கவனமாகவும் ஏமாறாமலும் இருக்க கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
1) தொலைபேசி இருக்கிறதா உங்களிடம் உங்கள் ATM கார்டு மேலே உள்ள நம்பர் கேட்டு போன் செய்வார் ஒருவர்..
2) நீங்கள் முகநூலில் இருந்தால் உங்கள் போட்டோக்களை திருடி உங்களைப்போலவே முகநூல் ஐடி கிரியேட் செய்து உங்கள் நண்பர்களை எல்லாம் அவர் நண்பர்கள் ஆக்கி நண்பர்களிடம் கடன் கேட்பார் நீங்கள் கடன் கேட்பதாக நினைத்து உங்கள் நண்பர்கள் யாரோ ஒருவருக்கு கடன் கொடுத்து ஏமாறுவார்கள்.
3) முகநூலில் ட்விட்டரில் அனைத்து சமூக வலைதளங்களிலும் பல விதமான விளம்பரங்கள் சோப்பு முக கிரீம் துணிமணிகள் இப்படி பலவிதமான நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் சோப்புக் கட்டி வரப்போவதில்லை செங்கல் கட்டி தான் வருகிறது.
4) ஒரு இரவு நெடுந்தூர பயணம் செய்கிறீர்கள் டோல்கேட் கடக்கும் போது ஜன்னலை இறக்கியபோது உங்கள் வாகனத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் நகைகள் அணிந்து உள்ளார்களா என்பதை கண்காணித்து உங்கள் வண்டி டோல்கேட்டை கடந்து சில மைல் தூரம் சென்றவுடன் உங்கள் காரின் கண்ணாடிகள் மூட்டைகளை கொண்டோ கல்லோ அடிக்கப்பட்டு உங்கள் வண்டி தடுத்து நிறுத்தப்பட்டு பணம் நகைகள் கொள்ளையடிக்கப்படும் மோசமான நிகழ்வுகள் நடக்கிறது..
தனியாக செல்லும் பெண்ணின் நகைகள் பட்டப் பகலிலே மோட்டார் சைக்கிளில் செல்லும் சிறுவர்கள் மற்றும் சிலரால் போதைக்காகவும், பணக்காரனாய் வாழ ஆசைப்பட்டும் கொள்ளையடித்தல்…
இவ்வாறு பல இடங்களில் எதிர்பாராத ஏமாற்றங்களும் நம்பிக்கை துரோகங்கள், துன்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர் பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கும் பல கயவர்கள்..
ஒருவரின் இரக்க குணத்தை ஏமாளி குணமாக மாற்ற பலர் முயற்சி செய்து வருகின்றனர். எங்கோ ஒரு மூலையில் எங்கோ ஒரு ஊரில் தொண்டு நிறுவனம் உள்ளதாகவும் அதற்கு நிதி உதவி செய்யுமாறும் தொலைபேசி அழைப்பு யாரென்றே தெரியாத ஒருவருக்கு எவ்வாறு நிதியுதவி செய்வது?
உங்களுக்கு உங்கள் செல் நம்பருக்கு பரிசு விழுந்ததாக ஆயிரம் ரூபாய் கட்டி அந்த பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்று தொலைபேசி அழைப்பு..
இவ்வாறு பலபல ஏமாற்றும் கூட்டங்கள் ஏமாறும் மனிதர்கள்.. மனசாட்சி என்பதே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது இந்த காலம்…
அதனால்தான் கவனம் கவனம் நம் குழந்தைகளையும் கவனமாக இருக்க பழகிக் கொடுப்போம்..
ஆனால் எந்த வகையான ஏமாற்றம் ஏற்பட்டாலும் நம் தலையெழுத்து ஏமாறனும்னு இருக்கு என்று அப்பாவியாய் இருந்து விடாமல் உங்களிடமுள்ள அனைத்து தகவல்களுடன் காவல்துறையில் நேரிலோ ஆன்லைனிலோ கண்டிப்பாக புகார் அளியுங்கள். நீங்கள் புகாரளிக்காமல் இருப்பது அவனை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டும்..
நீதிமன்றத்திற்கும், காவல்துறைக்கும் பயமில்லாமல் என்று
திருடனாய் பார்த்து திருந்தி திருட்டை ஒழிப்பது??….
ஆனால் அவர்கள் எப்போ திருந்துவது? அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? இதே சமூகத்தில் இருந்தே உருவாகிறார்கள் அந்த அவர்கள்.. இந்நிலை மாறும் காலம் என்றோ? நல்ல சமுதாயம் உருவாகும் காலம் ஒன்றே இதற்கு முடிவு.. கனவு காண்போம்…..