164. அருளை அள்ளித்தந்த சாய்பாபா
தாமிரபரணி நதியைபற்றி கரையோரமாக நடந்து வந்து வரலாறுகளை திரட்டி தரும் தொடர் இது. ஏற்கனவே நாம் நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் ஒன்றை எழுதி, அந்த தொகுப்பு தலைத்தாமிபரணி என்ற பெயரில் நூலாய் வந்து விட்டது. தற்போது இரண்டாவது பாகம் பணி நடந்து கொண்டிருக்கிறது. கோபால சமுத்திரம், சுத்தமல்லி, பழவூர், கருங்காடு போன்ற கிராமங்களை கடந்து தற்போது தருவை கிராமத்தில் எழுதி கொண்டிருக்கிறேன். இந்த தொடரை மும்பையில் இருந்தது வெளிவரும் ஒரே ஒரு தமிழ் வார இதழான வணக்கம் மும்பை வெளியிட்டு வருகிறது.
வணக்கம் ஸ்ரீவை வாசகர்களுக்காக இவ்விடத்தில் பதிவிடுகிறோம்.
தருவை கிராமத்தில் உள்ள சாய்பாபா கோயில் வரலாற்றை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அம்பாசமுத்திரத்தில் சாய்பாபா திருவுருவத்தை வாங்க முயற்சி செய்த போது இசக்கிக்கு சிலை கிடைக் கவில்லை.
தன்மனதில் அடிக்கடி நிறைந்து விட்ட ஸ்ரீ சீரடி சாய்பாவை பூஜிக்க நினைத்த போது அவருடைய திருவுருவம் கிடைக்க வில்லையே என்று இசக்கி நினைத்தபடியே இருந்தார்.
தீடீரென்று ஒருவர் அவரை நோக்கி வந்தார். நீங்கள் என்னுடன் அக்ரகாரம் வரை வாருங்கள் என்று அழைத்தார். அந்த அன்பரும் தெய்வ பக்தி நிறைந்தவர் என்பதால் அவரைத் தொடர்ந்து சென்று அவருடைய இல்லத்தை அடைந் தார். அந்த அக்ரகாரத்தில் வசித்தவர் ஸ்ரீ சீரடி சென்று ஸ்ரீ சாய்பாவை நேரடியாக தரிசித்து திரும்பியவர். ஒன்பது வாரம் விரதம் இருந்து ஒன்பதாவது வார நிறைவு விரத தினமாக அன்று இருந்தால் ஸ்ரீ சீரடியிருந்து வாங்கி வந்த ஸ்ரீ சாய்பாபாவின் திருவுருவ சிலையை இசக்கிக்கு அந்த அன்பர் கொடுக்க முன்வந்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் ஸ்ரீ சாய்பாபவின் திருவுருவத்தை இசக்கி பெற்றுக்கொண்டார்.
இனிப்பு பழங்கள், பலகாரம் ஆகியவற்றையும் அந்த அன்பர் அவருக்கு தந்தார் சாட்சாத் ஸ்ரீ சீரடி சாய்பாபாவே வந்து தன்னுடைய திருவுருவத்தையும் பிரசாதத்தையும் அருளினார் என்றே இசக்கிக்குத் தோன்றியது. அது மட்டுமின்றி ஸ்ரீ சீரடி சாய்பாபாவை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய புகழை மேலும் மக்கள் அறியும் படி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருடைய மனத்தில் வேரூன்றியது. ஸ்ரீ சாப்பா£ திருவுருவத்தையப் பெற்றுக்கொண்டு வீடு வந்தார். ஏதாவது ஒன்றினை நினைத்தால் ஸ்ரீ சாய்பாபா உடன் இருந்து துணை செய்வது போன்ற ஒரு உணர்வினை அவர் அடைந்தார். இதுபோல பல அனுபவங்கள் இசக்கி அவர்களின் வாழ்க்கை பயணத்தில் நிகழ்ந்து கொண்டே இருந்தது. அக்ரகாரத்தில் அந்த அன்பர் ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் திருவுருவத்தை அணிந்து அப்பம் வைத்து பூ¬ஜை செய்யும் படி கூறியிருந்தார். அதன் படி இசக்கி ஒரு அப்பம் வைத்து ஸ்ரீ சீரடி சாய்பாபாவை பூஜித்த போது அது வியாழக்கிழமையில் 15 அப்பமாக மாறியது. இதைக்கண்டு அங்கிருந்த அன்பர்கள் பிரமித்தார்கள். ஸ்ரீசீரடி சாய்பாபா தன் ஆசிரமத்திற்கு வருகிறார்களுக்கு வேண்டிய அளவு அன்னதானங் களை பசிப்பிணி, என்னும் கொடிய நோயை தனிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததவர். ஆகவே இத்திருக்கோயிலை நாடி யார் வந்தாலும் ஸ்ரீ சீரடி சாய்பாபாவுக்கு பூஜை செய்து அன்னதானம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றத் தொடங்கியது. இவ்வாறு இசக்கியின் வழக்கைப் பயணத்தில் திருப்பு முனையாக ஸ்ரீ சீரடி சாய்பாபா வலம் வந்த படி இருந்தார்.
தன் விருப்பத்தை தந்தை மாரிமுத்து அவர்களிடம் கூறிய போது, “நீ சாமியார் ஆகி விடுவாயோ” என்று கூறித் தடுத்தார். ஆனாலும் இசக்கிக்கு ஸ்ரீசீரடி சென்று பாபாவை தசிரிக்க வேண்டும் என்ற ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த எண்ணத்தையும் ஸ்ரீ சீரடி சாய்பாபா நிறைவேற்றித் தரும் சூழல் ஏற்பட்டது. 6 நண்பர்களுடன் விமானத்தில் செல்லும் படியான சூழலை பாபாவே ஏற்படுத்தினார். ஆறு பேரும் விமானத்தில் பறந்து கெண்டிருந்தார்கள். அங்கிருந்த படியே ஸ்ரீ சீரடிக்கு தொடர் கொண்டு டிராவல்ஸ்ஸில் பேசிய போது அனைத்தும் அவர்களுக்கு உடனடியாக கிடைத்தது. விமானத் தை விட்டு இறங்கியதும் கார் தயாராக இருந்தது. வாடகை 100 ரூபாய் மட்டுமே. சாப்பாடு டீ என்ற எல்லாமே எங்களுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் அமைந்தது. பிளைட்டில் வரவழைத்து பாபாவே எல்லா வசதிகளையும் செய்து வருவதை இசக்கி நன்கு அறிந்து கொண்டார்.
நண்பர்களுடன் சென்று ஸ்ரீ சாய்பாபாவை கண்குளிர தரிசித்தார் இசக்கி. வழிபாடுகள் அனைத்தும் ஆனந்தமாக முடிந்ததும் பாபாவுக்கு பின்னால இருக்கும் வேப்ப இலை இனிக்கும் என்று கேள்விப்பட்ட இசக்கி அதனை அறிய நினைத்£ர்.
பாபாவையே பரிசோதிப்பதா என்ற எண்ணமும் அவருக்கு எழுந்தது. அந்த சமயம் ஒரு இலை அவர் காலுக்கு அருகில் வந்து விழுந்தது. சோதித்து பார்க்க மனம் வரவில்லை. அதை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ரூமுக்கு வந்தார் இசக்கி நண்பர்களும் தங்களுக்கு இலை கிடைத்த விவரங்களை சொன்னார்கள். பாபாவே எங்களை சாப்பிட வைத்தார். வேப்ப இலை இனித்தது. இப்படி எல்லா இடங்களிலும் இசக்கிக்கு பாபாவின் பரிபூரண ஆசி கிடைத்து வந்தது. தன் காரணமாக வருடம் ஒரு முறை ஸ்ரீ சீரடி சென்று பாபாவை தரிசித்து வந்தார். வீட்டில் ஆரத்திகள் தொடர்ந்து வந்தன. ஒரு சமயம் எதிர்பாராத வகையில் அவருடைய தந்த மாரியப்பன் அவர்கள் அல்சர் நோயால் துன்பம் அடைந்தார். முதலில் காண்பித்த டாக்டரை விட்டு வேறு டாக்டரிடம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மறுநாள் வேலை விஜயமாக பொங்களுரில் ஒரு மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டி நிலையில் இருந்தார் இசக்கி. என்ன செய்வ தென்றே அவர்களுக்கு விளங்க வில்லை உடனே பா£பவை நினைத்து எனக்கு ஏன் இந்த சோதனை என்று வேண்டிய படி இருந்தார் இசக்கி. அப்போது சென்னையிருந்த அவருடைய பெரியப்பா நைனர். அவரிடம் தொலைபேசியல் தொடர்பு கொண்டு பேசனார். மகான்கள் சக்தி வாய்ந்தவர்கள். சாப்பாப உள் கூடவே தான் இருபார். செய்ய வேஷ்டி கடமைகள் செய் டாக்டர் மங்கள ரவியிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை செய்யும் படி கூறினார். மங்கள ரவியின் சந்திப்பு நிகழவில்லை. அந்த நிலையில் டாக்டர் பக்தவச்சலம் அவர்களிடம் சேர்ந்து சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அப்பாவின் தலையணைக்கு கீழ் பாபாவின் உதி வைத்து பிரார்த்தனை செய்தபடியே இருந்தார் இசக்கி. எதிரபாரத விதமாக இரவு 1.30 மணிக்கு டாக்டர் மங்கள ரவி வந்து சிகிச்சை செய்தார் 3 நாட்கள் கழித்த பிறகு அப்பா பூரண குணம் அடைந்து விட்டார். அது போல இசக்கி அவர்களை மனைவி பிரசவ காலத்தில் குழந்தை குறுக்காக அமைந்து என்ன செய்வது என்ற பிரியாமல் தவித்த போது அனைவரும் ஸ்ரீ சாய்பாபாவை துதித்தனர். ஆக்சரியப்படும் வகையில் குழந்தை சீரான நிலைக்கு திரும்பி சுகப்பிரவம் ஆகியது. இந்த அதிசயங்கள் எல்லாம் பாபாவின் கருணையினால் நிகழ்ந்தன என்பதை அறிந்து கொண்டார்.
இந்த நிலையில் தான் பாபா மற்றுமொரு அருளை இசக்கிக்கு அருளினார்.
அந்த அருள்தான் என்ன?
( நதி வற்றாமல் ஓடும்)


