கருங்குளத்தில் வட்டார கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர்கள் 150 பேருக்கு வருமானவரித்துறை சம்பள பிடித்தம் தொடர்பான விண்ணப்ப படிவம் 16 வழங்காததையும், 2019 ஆண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கருங்குளம் பகுதியில் இருந்து பங்கேற்ற 60 ஆசிரியர்களுக்கு பணிகாலத்தை வரைமுறை படுத்தி ஊதியம் வழங்க கோரி அரசு உத்தரவிட்ட பின்னும் வழங்காத கருங்குளம் வட்டார கல்வி அலுவலரை கண்டித்தும் இன்று கருங்குளத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த உள்ளிருப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கருங்குளம் வட்டாரத்தலைவர் சக்தி தலைமை வகித்தார். தூத்துக்குடி கல்வி மாவட்ட தலைவர் எபேனேர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்வராஜ், மாவட்டத்தலைவர் கலையுடையார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அனைத்து வட்டார நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். வட்டாரச் செயலாளர் லூயுஸ் நன்றி கூறினார்.


