ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் கருங்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதற்காக பஜாரில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்த எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இனை செயலாளர் திருவரங்கம், மாவட்ட மாணவர் அணி இனை செயலாளர் மருதவிநாயகம், கருங்குளம் ஒன்றிய கவுன்சிலர்கள் பேச்சிமுத்து, என்னாயிரத்தான், ஒன்றிய பாசறை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


