கொங்கராயகுறிச்சியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட கல்வித் துறையின் சார்பாக மாவட்ட திட்ட அலுவலர் பாலதண்டாயுதபானி ஏற்பாட்டில், கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட கொங்கராயக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் கிராமங்கள் தோறும் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டுப்புற கலைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் கிராம பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மேலும் தன்னார்வலகள் பதிவு செய்யாத கிராமங்களை கண்டறிந்து அந்த பகுதிகளில் கலைகுழுக்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருங்குளம் வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயமேரி அற்புதம், ஒருங்கிணைப்பாளர் பீபேகம் ஆகியோர் செய்துள்ளனர்.


