இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.
இந்த திட்டத்தினை மக்களிடையே கொண்டு சேர்க்கக் கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்துங்கநல்லூர் புனித லூசியா நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ரமணிபாய் தலைமை வகித்தார். கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் தலைமையில் 10பேர் கொண்ட குழுவினர் நிகழ்ச்சியை நடத்தினர். கலைக்குழு சார்பாக மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசும் பள்ளிக்குப் புத்தகங்களும் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஸ்டாலின் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சி எம்.எம். நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஸ்ரீலதா தலைமையிலும், இந்து துவக்கப்பள்ளி மற்றும் டி.என்.டி.ஏ துவக்கப்பள்ளி வளாகத்திலும் நடந்தது.