ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து இரண்டு மாதத்திற்கும் மேலாக இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
அகழாய்வு பணியில் 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப்பகுதிகள், 3500 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய பட்ஜெட்டில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் அருங்காட்சியம் அமைய உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியை பார்வையிட வருகை தந்தார். அவர்கள் இடங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் வருகை தந்தார். அவர் அகழாய்வு பணிகள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் ஆய்வுகள் குறித்து விளக்கமளித்தார். அவருடன் ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துகுமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் உள்பட வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.


