ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர் மழையால் வாழைகள் பழுப்பு நிறமாக மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த மாதம் பருவமழை மற்றும் தொடர் மழை கொட்டித் தீர்த்தது. இதில் ஏராளமான விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணல்விளை கிராமத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சுமார் 5000க்கும் மேற்பட்ட வாழை பயிரில் தண்ணீர் தேங்கியதால் வாழை இலைகள் அனைத்தும் பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது. பழுப்பு நிறத்தில் மாறுவதால் வாழைத்தார்கள் காய் விளைச்சல் இல்லாமலே வாழையிலேயே பழுத்து வீணாகி விடும். இதனால் லட்சக்கணக்கில் முதலீடு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


