தூத்துக்குடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி, மெஞ்ஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சதீஷ் குமார் (25). இவர் 17 வயது மைனர் பெண்ணை கடத்தி காதல் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா விசாரணை நடத்தி, சதீஷ்குமார் மீது போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தார்.


