கொற்கை அகழாய்வில் தொடரும் அதிசயம். இரண்டடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு.
தமிழக தொல்லியல்துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தொல்லியல் ஆய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து ஆறு மாத காலமாக நடைபெற்று இருந்தால் பணியில் 600க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, 9 அடுக்கு கொண்ட பொருள்கள் வடிகட்டும் குழாய், சங்கருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான அடையாளங்கள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் செங்கல் கட்டுமானத்தை அடியில் 4 அடி உயரம் கொண்ட கொள்கலன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கொள்கலன் நேற்றைய தினம் தொல்லியல் ஆய்வாளர்கள் வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதன் அடியில் மற்றொரு கொள்கலன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொள்கலன் பழங்காலத்தில் தானியப் பொருட்கள் சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் ஆய்வுப் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது ஆய்வாளர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


