வராலாற்று சிறப்பு மிக்க இப்பேரவையின் நாயாகனாக வீற்றிருக்கும் மாண்புமிகு . பேரவை தலைவர் அவர்களே , பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையின் மானிய கோரிக்கை மீது பேசுவதற்கு காரணமாக விளங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியகத்தின் தியாக தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களையும் , எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களையும் , பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த முத்தமிழ் அறிஞர் . டாக்டர் கலைஞர் அவர்களையும் , கொரோனா மற்றும் பொருளாதார வீழ்ச்சி கடினமான சூழ்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று , 100 ஏ நாட்களில் சாதனைகள் பல புரிந்து , தமிழ்நாட்டை உலக அளவில் தலை நிமிர செய்து , முடங்கிக் கிடந்த அரசு இயந்திரத்தை சீர்திருத்தி அதை மிகச் சிறப்பாக இயக்கி கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் மற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்களையும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு . K.S. அழகிரி அவர்களையும் , விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு . மாணிக்கம் தாகூர் அவர்களையும் , எங்கள் பொருப்பாளர் திரு . தினேஷ் குண்டுராவ் அவர்களையும் வணங்கி . எனது வெற்றிக்காக தேர்தல் பரப்புரை செய்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு . கனிமொழி கருணாநிதி அவர்களையும் , தூத்துக்குடி தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொருப்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு . அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு , முதல்முறையாக போட்டியிட்ட என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த எனது ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கின்றேன் . பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறை என்றாலே நம் மனதிற்கு முன்பாக வருபவர் குலக்கல்வி முறையை வேரோடு அகற்றி , சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான கல்விக் கூடங்களை நிறுவி கல்விக் கற்க முடியாத ஏழை மாணவர்களின் வாழ்வில் கல்வி ஒளியை வீசச்செய்த , கல்விக்கண் திறந்த , கர்மவீரர் காமராஜர் அவர்களை வணங்குகிறேன் . எத்தனையோ துறைகள் இருந்தாலும் நம் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் துறைகள் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் ஆகும் . அவ்வாறு இந்த இரு துறை அமைச்சர்களுக்கும் அதிக பொறுப்பும் , கடமையும் உள்ளது . அதனை நமது மாண்புமிகு அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது . நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் , அரசு பள்ளிக் கூடங்கள் வருமையின் சின்னமாக இல்லாமல் பெருமையின் சின்னமாக இருக்கும் என்ற சொல் மகிழ்ச்சியையும் , நம்பிக்கையும் தருகிறது . அதேபோல் மாண்புமிகு . நிதி அமைச்சர் அவர்கள் தன்னுடைய பட்ஜெட் உறையில் அரசாங்கம் இனி ( Data’s Centric and Transparent ) ஆக இருக்கும் என கூறியது முதல் முறை சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் என்னை பொன்றவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது , ஏற்கனவே பட்ஜெட் உறையில் பள்ளிக் கல்வித் துறைக்காக 32,599.54 கோடிகள் நிதி ஒதுக்கியது நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியத்துவத்தை காண்பித்துள்ளார்கள் . 114.18 கோடியில் 1784 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு ( High Tech Laboratories ) உயர்தர ஆய்வு கூடங்கள் , 20.76 கோடியில் 856 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ( SMART CLASS ) நவீன வகுப்பறைகள் , அதுபோக ரூபாய் 200 கோடியில் கொரோனாவால் கல்வி பயில முடியாத மானவர்களுக்கு ( Special Class ) சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்கனவே கொடுத்த அறிவிப்புகளும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது . அதேபோல் உயர்கல்வித் துறைக்காக 5369.09 கோடி ஒதுக்கி மேலும் 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் அமைக்கப்படும் அறிவிப்பும் பாராட்டுக்கூறியது . மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் ( TET ) தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிச் சான்றை 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள் முழுவதும் செல்லும் ( Life Time ) என்று அரசானை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பாராட்டுகிறேன் . பொருந்தலைவர் காமராஜர் எடுத்த சீரிய முயற்சி மற்றும் பின் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளும் எடுத்த முயற்சிகளால் கல்வித் துறையில் வேறு எந்த மாநிலங்களை விடவும் நாம் முன்னிலையில் உள்ளோம் . ஆனாலும் நம்மை போன்ற பெரிய மாநிலங்களில் கல்வித் துறைக்கென சவால்களும் உள்ளது . முன்பெல்லாம் குழந்தைகளுக்கு நிலாவை காண்பித்து சோறு ஊட்டும் காலம் சென்று இப்போது டி.வி , டேப்லெட் ( Tab ) மற்றும் மொபைல் ( Phone ) இவற்றை காண்பித்து சோறு ஊட்டும் காலமாக மாறிவிட்டது . இதன் விளைவாக மாணவ செல்வங்களுக்கு ( Attentional Disorder & Learning Disability ) கவனக்குறைவு மற்றும் கற்றல் குறைபாடு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன . இதை கல்விக் கூடங்கள் புரிந்து கொள்லாமல் , மாறாக அத்தகைய மாணவர்களால் படிக்க இயலாது என ஒதுக்கி மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர் . ஏறக்குறைய 60 மாணவர்களில் 5 மாணவர்களுக்கு இத்தகைய குறைபாடு உள்ளது அறியப்படுகிறது . அரசு இதில் தனி கவனம் செலுத்தி Special Educators & Alternate Teaching Method மாற்று கற்பித்தல் முறை தெரிந்த ஆசிரியர்களை பணியமர்த்திட அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் . அப்போதுதான் அவ்வாரான மாணவர்களின் மன என எதிர்காலம் பேணி காக்கப்படும் . அதுமட்டுமல்லாமல் பின்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ளது போல் Rote Education முறையை தவிர்த்து Critical Thinking முறையில் பாடங்கள் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் . Higher Education உயர்க்கல்வியை பொறுத்த வரை தமிழ்நாட்டில் 50 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் , 500 க்கும் மேற்பட்ட பொறியியல் , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருக்கின்றன . ஆனால் ( Innovation Index ) ) கண்டுபிடிப்பு குறியீடு என்ற குறிப்பில் 20 பல்கலைக்கழகங்கள் , 40 மருத்துவ கல்லூரிகள் மற்றும் 200 பொறியியல் , கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்ட கர்நாடகாவை விட நாம் பின்தங்கி உள்ளோம் . இந்த தகவலை ( NITI AAYOG ) வெளியிட்டுள்ளது . உலக அளவில் ( Global Innovation Index ) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் படி 131 நாடுகளில் நாம் 48 வது இடத்தில் தான் உள்ளோம் . இந்த நிலையை மேம்படுத்த பொருளாதாரத்திற்கு என்று வல்லுநர் குழுவை அமைத்தது போல் மாண்புமிகு . முதல்வர் அவர்கள் உயர்கல்விக்கும் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து நம்முடைய மாநிலத்தை ( Knowledge Capital of our Country ) நமது நாட்டின் அறிவாற்றலின் தலைநகரமாக மாற்ற ஆவன செய்ய வேண்டும் . பண்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி பணியை தமிழ்நாட்டில் மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் ( Research Park ) அமைத்திட வேண்டும் . அங்கே மாணவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை ( Proto Type ) முன்மாதிரிகளை செய்து பார்க்க 3D IF COOL ) , Integrated Chip , 5600floor 460LW Innovation Hub அமைத்திட வேண்டும் . இதன்மூலம் உள்நாட்டு கண்டுபிடிப்புகள் அதிகரிக்கப்படும் , வேலைவாய்ப்பும் உயரும் . வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் கூட இங்கே வந்து ஆராய்சிகள் மேற்கொள்ள வாய்ப்பாக அமையும் . இதன் மூலம் நமது பொருளாதாரம் மேம்படும் . தொலைநோக்கு பார்வை கொண்ட நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது . அதேபோல் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களும் இதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது கோரிக்கைகள் : சீர்மிகு துறைமுகம் கொண்ட எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மலைத்தொடரில் துவங்கி , வயல்வெளிகளையும் , மேய்ச்சல் நிலத்தினையும் , நிலமாக தோன்றும் தேரிக்காட்டினையும் , பெரியதாழை கடற்கரையையும் தன்னகத்தே கொண்டது எங்கள் ஸ்ரீவைகுண்டம் தொகுதி . அதாவது ஐவகை நிலங்களான குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை ஆகிய நிலங்களை கொண்ட மிகவும் பழமையானதும் , பாரம்பரியம் மிக்கதுமான , வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி பாயும் பொன்னான பூமி . உலக நாகரீகத்தின் தொட்டில் எனும் பழந்தமிழர் பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஆதிச்சநல்லூர் , சிவகளை மற்றும் முற்கால பாண்டிய துறைமுக தலைநகராம் கொற்கை ஆகியவை அமைந்திருக்கும் அற்புத பூமி எங்கள் தொகுதி . 1. நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பியுள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மழைக்காலங்களில் பெருமளவு தண்ணீர் கடலில் சென்று வீணாகிறது எனவே ஸ்ரீவைகுண்டம் அணையை ஆழப்படுத்தி , கரையைச் செப்பனிட்டு , ஷெட்டர்களை பழுது பார்த்து , அங்குள்ள அமலைச் செடிகளை நீக்கி கால்வாய்களைச் செப்பனிட்டு பெருங்குளம் , வெள்ளூர் , ஆறுமுகமங்கலம் போன்ற 10 க்கும் மேற்பட்ட பெரிய குளங்களை தூர்வார வேண்டும் என கனிவோடு கேட்டுக்கொள்கிறேன் . 2. கடந்த 30 ஆண்டுகளுக்கும் பழமையான கூட்டுக் குடிநீர் திட்டம் அதன் உச்சகாலகட்டத்தினை நெருங்கி விட்ட நிலையில் , தற்போது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது . ஆனால் அதற்கு போதிய நீர் ஆதாரம் இல்லை எனவே பழைய கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக மாற்றி புதிய திட்டம் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்கி குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டுகிறேன் . 3. ஆழ்வார்திருநகரி அருகில் உள்ள அப்பன் கோயில் இரட்டை திருப்பதி அருகே ஒரு தடுப்பணையும் அதனோடு கேமலாபாத்தை இணைக்கும் தரைப்பாலமும் அமைத்தால் தாமிரபரணி ஆற்றின் நீர் ஆதாரத்தை பெருக்க தடுப்பணையும் சுமார் 20 க்கு மேற்பட்ட கிராம மக்கள் திருச்செந்தூர் செல்ல உதவியாக தரைப்பாலமும் அமையும் . எனவே இரட்டை திருப்பதி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை மற்றும் தரைப்பாலம் அமைத்துத் தரவேண்டுகிறேன் . 4. புதிதாக அமைந்த ஏரல் தாலுகாவிற்கு ஒரு அரசு பொது மருத்துவமனை மற்றும் தீயணைப்பு நிலையம் அமைத்து தர வேண்டுகிறேன் . சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி டயாலிசிஸ் சென்டர் மற்றும் விபத்து அவரச சிகிச்சை மையம் அமைத்து தரவேண்டுகிறேன் . 5. சாத்தான்குளத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரியில் 1000 க்கு மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள் . சாத்தான்குளம் காமராஜர் கல்வி கழகத்தில் மூலம் 30 ஏக்கர் இடம் இலவசமாக அரசுக்கு கொடுக்கப்பட்ட போது பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் . அதன் படி இந்த கல்லூரிக்கு காமராஜர் பெயரை சூட்டி அரசாணை வெளியிட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன் . மேலும் இந்த கல்லூரிக்கு கூடுதல் வகுப்பு அறைகள் மற்றும் இளநிலை , முதுநிலை சம்பந்தப்பட்ட கூடுதல் பாடப்பிரிவு அமைத்து தரவும் வேண்டுகிறேன் . என 6. ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் ஆகிய வட்டங்களை இணைத்து தனி கோட்டமாக அறிவிக்கவேண்டும் . இங்கு சப்கலெக்டர் அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும் . இதனால் இரண்டு வட்டாரத்தினை சேர்ந்த மக்களுக்கும் அலைச்சல் குறையும் . 7. சாத்தான்குளம் தாலூகா , பேய்க்குளத்தில் புதிய தனி காவல்நிலையம் அமைத்து தரவேண்டுகிறேன் 8. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஏரலில் மகளீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் , ஸ்ரீவெங்கடேசபுரம் என்ற பேய்க்குளம் மற்றும் செய்துங்கநல்லூர் ஆகிய இடங்களில் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகலைகழகம் மூலமாக அரசு உறுப்பு கல்லூரி துவக்க ஆவண செய்ய வேண்டுகிறேன் . 9. கருங்குளம் பரம்பு பகுதியில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகிறது . ஆனால் அதற்கான பணி இதுவரை தொடங்கவில்லை . எனவே எனது தொகுதிக்கு உட்பட்ட கருங்குளத்தில் அரசு தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க வேண்டுகிறேன் . ஆகிய 10. ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் , சிவகளை மற்றும் கொற்கை இடங்களில் கிடைக்கப்பெற்ற அனைத்து பொருட்களையும் ஒருங்கினைத்து தமிழனின் புகழைப் போற்றும் வண்ணம் மாபெறும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுகிறேன் . 11. நவத்திருப்பதி ஸ்தலங்கள் , திருச்செந்தூர் கோவில் மற்றும் மணப்பாடு ( Little Italy ) ஆகிய சுற்றுலா ஸ்தலங்களை ஒருங்கிணைத்து , ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் படகு குழாம் ஏற்படுத்தி சுற்றுலா மைய்யமாக அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் 12. ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதியில் வாழை மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . இந்த வாழை தார்களை நல்ல விலைக்கு அரசே கொள்முதல் செய்யவும் , ஏரல் தாலுகா இருவப்பபுரம் கிராமம் பேய்க்குளத்தில் வாழை தார்களை சேகரித்து வைக்கும் குளிர்பதன கிடங்கை உருவாக்கி தரவேண்டுகிறேன் . இதேபோன்று சாத்தான்குளம் பகுதியில் உள்ள முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை போன்ற உற்பத்தி பொருள்களை மதிப்பூ கூட்டும் தொழில் மூலமாக தொழிற்சாலை அமைத்து பவுடர் மற்றும் இயற்கை வகையில் மாத்திரை போன்ற பொருள்கள் தாயரிக்க தொழிற்சாலை உருவாக்க வேண்டுகிறேன் . 13.கருங்குளம் ஒன்றியம் கால்வாய் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் , இதே போல் சாத்தான்குளம் ஒன்றியம் , பன்னம்பாறை , புதுக்குளம் , சுண்டங்கோட்டை ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி தர வேண்டுகிறேன் . 14.சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஞானியார் குடியிருப்பு , உசரத்துகுடியிருப்பு , புத்தன்தருவை , தச்சன்விளை , பனைவிளை மற்றும் பேய்க்குளம் ஆகிய அரசு பள்ளிகளை நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தரவேண்டுகிறேன் . 15. ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன் . 16.பண்டாரவிளையில் சேதமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுகிறேன் . 17.ஏரல் தாலுகா , செபத்தையாபுரத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையமாகவும் , சாத்தான்குளம் தாலுகா தட்டார்மடத்தில் தரம் உயர்த்தப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைத்து தரவேண்டுகிறேன் . 18. சாத்தான்குளம் பேருந்து பணிமனையிலிருந்து 6 வழிதடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது . இதனால் அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது . எனவே மக்கள் நலன் கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க ஆவண செய்ய வேண்டுகிறேன் . 19.நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான கருங்குளம் மூலைக்கரைப்பட்டி சாலை , முனைஞ்சிபட்டி – சேரக்குளம் சாலை , மீனாட்சி பட்டி பேட்மாநகரம் சாலை , பொன்னங்குறிச்சி பேய்க்குளம் சாலை , சாயர்புரம் பெருங்குளம் சாலை , ஸ்ரீவைகுண்டம் புதுக்கோட்டை சாலை , உமரிக்காடு முக்காணி சாலை , மங்களகுறிச்சி – காடுவெட்டி சாலை , சாத்தான்குளம் – கழுங்குவிளை சாலை , சாத்தான்குளம் பெரியதாழை சாலை , பன்னம்பாறை விலக்கு முதல் பேய்க்குளம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி செம்மை படுத்தி புதிதாக சாலை அமைத்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் . 20.ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட முக்காணி , சேரகுளம் , பன்னம்பாறை மற்றும் தச்சன்விளை ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டுகிறேன் . 21. ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட சேரகுளம் , முதலூர் மற்றும் கழுங்குவிளை ஆகிய இடங்களில் துணை மின்நிலையம் அமைத்து தரவேண்டுகிறேன் . 22. ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற கட்டிடம் மிகவும் பழமையானது . இந்த கட்டிடத்தினை புதிய கட்டிடமாக மாற்றி தர வேண்டுகிறேன் . 23.கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள செய்துங்கநல்லூர் , ஆழ்வார்திருநகரியில் உள்ள வெங்கடேசபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்கள் வளர்ச்சியை கருதி பேரூராட்சியாக மாற்ற தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் 24.சாயர்புரம் பேரூராட்சியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க நடப்பு ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் . 25. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்த 41 கல்லூரிகளை , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக தரம் உயர்தப்பட்டுள்ளது . அதில் தற்காலிகமாக பணிபுரியும் பேராசிரியர்களை பணி நிரிந்தரம் செய்து தர வேண்டும் . மேலும் கல்வியின் தரத்தை உயர்த்த சிறப்பு பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் . மற்றும் பணி நிரந்தரம் செய்யும் போது அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கிட வேண்டுகிறேன் . 26.பல ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்ப பின்னணி கொண்ட மாணவர்கள் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர் . அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ள அனைத்து திட்டங்களும் , பயன்களும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டுகிறேன் 27.பனை மரங்களும் , பனை தொழில்களும் நிறைந்தது எங்கள் தொகுதி . பனைமரம் ஏறுவதற்கு தற்போது வாலிபர்கள் தயக்கம் காட்டும் நிலையில் அவர்களுக்கு நவீன முறையில் பனை ஏறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் . தற்போது அநேகமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார் . அந்த பனை தொழிலாளிக்கு விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு விபத்து காப்பிட்டு தொகை கிடைப்பதில்லை , அவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்ற ஆணையை தமிழக அரசு தரவேண்டுகிறேன்.


