விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, தூத்துக்குடி சிவன் கோவில் அருகேயுள்ள கடைகளில் பல்வேறு அளவுகளிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்குக் குவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்துப் பூஜை செய்வதற்காக ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுமக்களின் வசதிக்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் முதல் பெரிய அளவிலான வண்ணச் சிலைகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இக்கடைகளில் விநாயகர் சிலைகள் ரூ.20 முதல் ரூ.3,000 வரை பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. பண்டிகை நாளையொட்டி கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.