செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான சிவகாமி சமேத பதஞ்சலி வியா க் கிரபாதீஸ்வர் சிவன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு நடந்தது. இதையொட்டி மாலை 4 மணிக்குச் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அதன்பின் அன்னைக்குச் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காகச் சீர்வரிசை பொருட்கள் அபிஷேக பொருள்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின் திரு மாங்கல்யம் பலம்பெறவும், குழந்தை பாக்கியம் கிடைத்திடவும் திருமணத்திற்கு நல்ல வரன் அமைந்திடவும் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 6 மணிக்கு மடி நிரப்பி குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்குச் சிவகாமி அம்பாள் சந்நிதானத்தில் காப்புக் கட்டப்பட்டது. அதன்பின் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் கோவில்பத்து ஸ்ரீ பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வர் ஆன்மிக பேரவை செய்திருந்தனர்.


