ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ செய்துங்கநல்லூர் சட்டநாதர் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலிலேயே ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக எஸ்.பி.சண்முகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். அதன்பின்னர் இன்று இரவு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்மாள் சமேத வீரபாண்டீஸ்வரர் சட்டநாதர் கோவிலில் தனது குடும்பத்தினருடன் எஸ்.பி.சண்முகநாதன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் இன்று சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
கடந்த மாதம் ஶ்ரீவைகுண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்துங்கநல்லூர் சட்டநாதர் கோயிலில் திருப்பணிகள் செய்யப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


